/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காமாட்சி அம்மன் கோயிலில் மண்டல பூஜை
/
காமாட்சி அம்மன் கோயிலில் மண்டல பூஜை
ADDED : மார் 22, 2024 05:17 AM

ஒட்டன்சத்திரம்: பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உப கோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிப்.2ல் கும்பாபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று 48 ம் நாள் மண்டல பூஜை நடந்தது.
இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், யாகசாலை நடந்தது.இதை தொடர்ந்து காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர் தெய்வங்களுக்கு புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன் சத்யா, கண்காணிப்பாளர் மகேஸ்வரி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் அம்சநிவேதா, நகர அவைத்தலைவர் சோமசுந்தரம், கமிஷன் கடை உரிமையாளர் சிவா கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.

