ADDED : ஆக 15, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : நீட் தேர்வை நீக்க வேண்டும்,தமிழக மீனவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகில் திண்டுக்கல் மாவட்ட ம.தி.மு.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமை வகித்தார். பொருளாளர் பழனிசாமி,தீர்மான குழு உறுப்பினர் தமிழ்வேந்தன்,மாநில விவசாய அணி துணை செயலாளர் தியாகராஜன்,கவுன்சிலர் காயத்திரி,நகர செயலாளர் செல்வேந்திரன்,ஒன்றிய கவுன்சிலர் மோகன் பங்கேற்றனர்.