மாவட்டத்தில் குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் பேச்சு
மாவட்டத்தில் குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் பேச்சு
ADDED : ஜூலை 24, 2026 10:43 PM
திண்டுக்கல், ஜூலை 25
திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமை வகித்தார். கலெக்டர் துர்கா முன்னிலை வகித்தார். எஸ்.பி., ஜெயக்குமார், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், ‘குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி விரைவாக விநியோகம் செய்வதை உறுதி செய்யுங்கள். உள்ளாட்சிகளில் சேகரமாகும் கழிவுகள் மூலம் ‘பயோகாஸ்’ தயாரித்து சுழற்சி முறையில் செயல்படுத்துப்படும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதனை திண்டுக்கல் மாவட்டத்திலும் துவங்க வேண்டும். அதற்கான ஆயத்தப்பணிகளை முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து ரூ.13.88 கோடி மதிப்பிலான 61 முடிவுற்ற கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார். பின் 5313 பயனாளிகளுக்கு ரூ.4.54 கோடி மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
