/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மோடிக்கு 28 பைசா, பழனிசாமிக்கு பாதம் தாங்கி தேர்தல் பிரசாரத்தில் செல்ல பெயர் சூட்டி அமைச்சர் உதயநிதி பேச்சு
/
மோடிக்கு 28 பைசா, பழனிசாமிக்கு பாதம் தாங்கி தேர்தல் பிரசாரத்தில் செல்ல பெயர் சூட்டி அமைச்சர் உதயநிதி பேச்சு
மோடிக்கு 28 பைசா, பழனிசாமிக்கு பாதம் தாங்கி தேர்தல் பிரசாரத்தில் செல்ல பெயர் சூட்டி அமைச்சர் உதயநிதி பேச்சு
மோடிக்கு 28 பைசா, பழனிசாமிக்கு பாதம் தாங்கி தேர்தல் பிரசாரத்தில் செல்ல பெயர் சூட்டி அமைச்சர் உதயநிதி பேச்சு
ADDED : மார் 25, 2024 06:49 AM
திண்டுக்கல், : '' பிரதமர் மோடிக்கு 28 பைசா,பழனிசாமிக்கு பாதம் தாங்கி என செல்ல பெயர் வைத்துள்ளதாக,'' விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசினார்.
திண்டுக்கல் மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி தானும் ஒரு கம்யூ.,தான் என பெருமையாக கூறுவார். மக்களாகிய நீங்கள் ஏப்.19ல் ஓட்டுச்சாவடிக்கு சென்று தி.மு.க.,கூட்டணிக்கு ஓட்டளித்து பிரதமர் மோடி தலையில் குட்டு வைக்க வேண்டும். மத்திய அரசுக்கு 1 ரூபாய் ஜி.எஸ்.டி .வரி கட்டினால் 28 பைசா தான் தமிழகத்திற்கு தரப்படுகிறது.ஆகையால் அவருக்கு நான் மிஸ்டர் 28 பைசா என செல்ல பெயர் வைத்துள்ளேன். இதேபோல் அ.தி.மு.க.,முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கும் பாதம் தாங்கி என செல்ல பெயர் உள்ளது. மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1 கூட இன்னும் நிதி ஒதுக்கவில்லை. 10 ஆண்டு கால ஆட்சியில் திட்டத்தை மேம்படுத்த அ.தி.மு.க.,வினர் எதுவும் செய்யவில்லை. கொடைக்கானலில் தேசிய கூட்டுறவு ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி தி.மு.க.,பார்த்து குடும்ப ஆட்சி என விமர்சித்து வருகிறார். தமிழகமே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் தான். அதனால் இது குடும்ப ஆட்சி தான். மோடி ஆட்சியை அகற்றாமல் துாங்கமாட்டோம் என்றார்.அமைச்சர்கள் பெரியசாமி,சக்கரபாணி,பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார், வேட்பாளர் சச்சிதானந்தம்,மேயர் இளமதி,துணை மேயர் ராஜப்பா பங்கேற்றனர்.
நத்தத்தில் பிரசாரம்
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் நடந்த பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது. பா.ஜ ., அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. புயல் மழை வெள்ளத்தில் தமிழக மக்கள் பாதித்த போது மோடி இங்கு வந்து மக்களை பார்க்கவில்லை. தற்போது தேர்தல் வருவதால் தமிழகத்தையே சுத்தி வருகிறார். நீட் தேர்வால் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். தற்போது புதிய கல்விக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கின்றனர். அவ்வாறு வந்தால் 8,5ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதும் சூழல் வரும்.
நத்தம் பகுதியில் வரும் கல்வியாண்டில் 10 ஏக்கரில் அரசு கலைக் கல்லுாரி அமைக்கப்படும் என்றார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், தி.மு.க., மேற்கு மாவட்ட பொருளாளர் க.விஜயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, தர்மராஜன், மோகன், வெள்ளிமலை, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார்சாமி கலந்து கொண்டனர்.

