ADDED : ஜூன் 08, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஜூன் 9-
பெட்ரோல், டீசல் , சமையல் காஸ் விலையை கட்டுப்படுத்திட வலியுறுத்தி திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத்தலைவர் பாக்கியம் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ராணி, மாவட்ட செயலாளர் பாப்பாத்தி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பாண்டியம்மாள், வனஜா, சித்ரா, ஜானகி, கவுன்சிலர் மாரியம்மாள் பங்கேற்றனர்.
