ADDED : ஆக 06, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு, ஆக.7-
வத்தலக்குண்டு மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் அம்மன் முளைப்பாரி, கரகத்துடன் ஊர்வலம் நடந்தது.
வத்தலக்குண்டு தெற்கு தெரு கருப்பண்ணசாமி, மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஆக.,3ல் துவங்கியது. மஞ்சள் ஆற்றில் இருந்து கரகம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முளைப்பாரி ஊர்வலத்துடன் கரகம் ஆற்றில் கரைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
