/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாம் தமிழர் கட்சி பிரசாரம் துவக்கம்
/
நாம் தமிழர் கட்சி பிரசாரம் துவக்கம்
ADDED : மார் 29, 2024 06:12 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் நாம் தமிழர் வேட்பாளர் கயிலைராஜன் தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து பிரசாரத்தை துவங்கினார். கட்சி உறுதிமொழி ஏற்றபின் வாகனத்தில் துவங்கிய ஊர்வலமானது ஆர்.எம்.காலனி, மின்மயானம், காட்டாஸ்பத்திரி, ஒய்.எம்.ஆர்.பட்டி, வழியாக மணிக்கூண்டை அடைந்தது. அங்கு நடைபெற்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் மாதவன் வரவேற்றார்.
நத்தம் சிவசங்கரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் புதுகை ஜெயசீலன், மாநில உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன், மண்டல பொறுப்பாளர் சைமன் ஜெஸ்டின் பேசினர். தொகுதி தலைவர் பழனிகுமார் நன்றி கூறினார்.

