ADDED : ஜூலை 29, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜூலை 31) நிறுத்தப்பட உள்ளது.
முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடங்களில் மலைக்கோயில் சென்று விடலாம். மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. பக்தர்கள் வின்ச், படிப்பாதை, யானைப்பாதை பயன்படுத்தலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.