தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொற்று பரப்பும் கழிவுநீரால் அல்லாடும் மக்கள்...

தொற்று பரப்பும் கழிவுநீரால் அல்லாடும் மக்கள்...

தொற்று பரப்பும் கழிவுநீரால் அல்லாடும் மக்கள்...


ADDED : ஏப் 29, 2024 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2024 06:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டூவீலர்களால் அவதி

திண்டுக்கல் சாலை ரோட்டில் டூவீலர்களை அங்கும் இங்கும் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வங்கிகளுக்கு ஏராளமானோர் வந்து செல்வதால் வாகனங்களை முறையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேந்திரன், திண்டுக்கல்.

.......

சேதமான தண்ணீர் குழாய்

திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதனால் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உடைந்த தண்ணீர் குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அஷ்வினி, எம்.வி.எம்.நகர்.

........

துார்வாராத ஓடையில் புற்கள்

ஒட்டன்சத்திரம் பழநி ரோட்டிலிருந்து கஸ்துாரி நகர் செல்லும் ஓடையில் ஆளுயரத்துக்கு மேல் ரோட்டோரங்களில் புற்கள் முளைத்துள்ளது. இதனால் இவ்வழியில் செல்லும் மக்கள் அச்சப்படுகின்றனர். ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துசாமி,ஒட்டன்சத்திரம்

........

சேதமான ரோடுகளால் பாதிப்பு

எரியோடு நல்லமநாயக்கன்பட்டியில் தொட்டணம்பட்டி மெயின் ரோடை இணைக்கும் சிமென்ட் ரோடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் பயணிக்கும்போது அதிக சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதியில் தரைப்பாலம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜோதி, எரியோடு.

............

பயன்பாடில்லாத சுகாதார வளாகம்

ஆத்துார் தாலூகா அக்கரைபட்டியில் புதிதாக கட்டிய சமுதாய சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது. இதை மக்கள் பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். சுகாதார வளாக கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபாகரன், அக்கரைப்பட்டி.

.........

குப்பையால் உருவாகும் சீர்கேடு

திண்டுக்கல்- பழைய கரூர் ரோட்டில் பிளாஸ்டிக் கலந்த குப்பையை அள்ளாமல் தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குப்பையை எரிக்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஞ்சிதா, திண்டுக்கல்.

........

தொற்று பரப்பும் கழிவுநீர்

திண்டுக்கல் கொட்டபட்டி ரோட்டில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இதை தடுக்க வேண்டும். மணிவண்ணன், திண்டுக்கல்.

...............................................

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us