தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குடிநீர் கேட்டு கோரிக்கை மனு

குடிநீர் கேட்டு கோரிக்கை மனு

குடிநீர் கேட்டு கோரிக்கை மனு


ADDED : ஆக 03, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை: சின்னழகுநாயக்கனுார் ஊராட்சி தாசமநாயக்கன்பட்டியில் 120 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஊர் அருகே உள்ள ஓடையில் ‘போர்வெல்’ அமைத்து, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. தண்ணீர் குறைவாக வந்ததால் கடந்த 2 மாதங்களாக ரெட்டியபட்டி பூனைக்கல் காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து, இரு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்தது. கடந்த ஒரு மாதமாக அந்த குடிநீரும் வரவில்லை.

இதனால் குடிநீரின்றி அவதிப்பட்ட மக்கள், முன்னாள் வார்டு உறுப்பினர் தர்மர் தலைமையில், குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஒ., முருகாநந்தத்திடம் குடிநீர் வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர். மூன்று நாட்களில் காவிரி குடிநீர் விநியோகத்தை சீராக வழங்குவதாக அவர் உறிதியளித்தார். பின் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us