ADDED : ஏப் 18, 2024 05:42 AM
தகராறில் இருவர் கைது
திண்டுக்கல் : பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி39. அதே பகுதியை சேர்ந்தவர்கள் பிரசன்னா28,கார்த்திக்20.இவர்கள் நண்பர்கள். கிருஷ்ணமூர்த்தியின் உறவினர் கார்த்திக் என்பதால் பிரசன்னாவுடன் சேரக்கூடாது என கார்த்திக்கை கண்டித்தார். இதை பிரசன்னாவிடம் கார்த்திக் கூற , இருவரும் டூவீலரில் வந்த கிருஷ்ணமூர்த்தியை தாக்கினர். தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மது விற்ற இருவர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் தொகுதி பா.ம.க.,வேட்பாளர் திலகபாமா பழநி ரோடு பழைய கொட்டப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். சிலர் அங்குள்ள கோடவுனில் மது விற்றனர். இதைப்பார்த்த வேட்பாளர் திலகபாமா ஆதரவாளர்களுடன் கோடவுன் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தாலுகா போலீசார் குட்டத்து ஆவாரம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சேசுராஜ்60,அணைப்பட்டியை சேர்ந்த விஜயன்30, இருவரையும் கைது செய்தனர்.
விபத்தில் ஒருவர் பலி
சத்திரப்பட்டி : பழநி விருப்பாச்சி அருகே சமத்துவபுரம் பஸ்ஸ்டாண்ட் அருகே அம்பிளிகை சின்ன கரட்டுப்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி 38, பழநி நோக்கி சென்றார். எதிரே வந்த அரசு பஸ்சில் மோதி இறந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

