தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எஸ்.பாறைப்பட்டியில் போராட்டம்

எஸ்.பாறைப்பட்டியில் போராட்டம்

எஸ்.பாறைப்பட்டியில் போராட்டம்


ADDED : ஏப் 01, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2024 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : சிங்காரக்கோட்டை எஸ்.பாறைப்பட்டியில் காளியம்மன், மாரியம்மன் விநாயகர் கோயில் உள்ளது.

இங்கு நேற்றிரவு துவங்கி ஏப்.2 வரை வரை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

கோயிலில் பூஜாரி பணி உரிமை தொடர்பான பிரச்னையில் இரு தரப்பாக பிரிந்து செயல்படுகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வேடசந்துார் தாசில்தார் சரவணக்குமார் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.இதனால் நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னரே திருவிழா நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தற்போதைக்கு திருவிழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் அதிருப்தியான கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஊர் மந்தையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் புறக்கணிப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us