/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடை புதுப்பிக்காததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி
/
சேதமான ரோடை புதுப்பிக்காததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி
சேதமான ரோடை புதுப்பிக்காததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி
சேதமான ரோடை புதுப்பிக்காததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி
ADDED : ஜூலை 25, 2024 06:59 AM

குஜிலியம்பாறை: பாளையம் பேரூராட்சி சாணிபட்டிக்கு செல்லும் தார் ரோடு சேதமடைந்துள்ளதால் ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாளையம் பேரூராட்சி 5 வது வார்டில் உள்ளது சாணிபட்டி. இந்த ஊருக்கு குஜிலியம்பாறை, அய்யாக்கவுண்டனுார் வழியாக வீரக்கவுண்டன்பட்டி செல்லும் தார் ரோட்டில் சென்று சாணிபட்டி பிரிவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும். இந்த பிரிவு ரோடு 1.5 கி.மீ., துரம் ஆகும். இந்த ரோடு 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதால் கற்கள் பெயர்ந்து உள்ளது. நடப்பதற்கே பயனற்ற இந்த ரோட்டில் தான் வேலைக்கு செல்வோர், விவசாயிகள், காய்கறிகளை கொண்டு செல்வோர் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். சாணிபட்டி வரும் இந்த ரோட்டை புதுப்பித்து தரக்கோரி பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புதுப்பிக்கலாமே
ஏ.பிச்சைமுத்து, விவசாயி, சாணிபட்டி : இங்கிருந்து 30-க்கு மேற்பட்ட மாணவர்கள் தினமும் நடந்து குஜிலியம்பாறை அரசு பள்ளி செல்கின்றனர். இதேபோல் தனியார் பள்ளி, கல்லுாரி, நுாற்பாலை வாகனங்களும் வந்து செல்கின்றன. இந்த ரோட்டை புதுப்பித்தால்தான் இந்த ஊர் மக்களுக்கு நல்லது. இப்பகுதி மக்களின் நலன் கருதி தார் ரோட்டை விரைந்து புதுப்பிக்க வேண்டும்.
கற்கள் பெயர்ந்து கிடக்கிறது
ஏ.ராஜா, பால் வியாபாரி, சாணிபட்டி: இந்த ரோட்டில் தான் விவசாயிகள் விளை பொருட்களை டூவீலரில் கொண்டு செல்கின்றனர். புதன்கிழமை வாரச்சந்தைக்கும் கூடுதலான மக்கள் நடந்து சென்று வருகின்றனர். கூடுதலான போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டை புதுப்பிக்காமல் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்துக்குள் இருக்கும் இந்த ரோடு இவ்வளவு மோசமாக இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
காலம் தாழ்த்துகின்றனர்
என்.பிரபு, டெய்லர் , சாணிபட்டி: பாளையம் பேரூராட்சி 5 வது வார்டில் எனது அம்மா தான் கவுன்சிலர். இருந்தும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நாங்கள் வைக்கும் எந்த கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்ற முன்வருவதில்லை. இந்த தார் ரோடு பத்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். தற்போது நடப்பதற்கே பயனற்றுள்ளது. இந்த ரோட்டை புதுப்பிக்க காலம் தாழ்த்துகின்றனர் என்றார்.