ADDED : ஆக 15, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார், : ஸ்ரீ ராமாபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற நிலையில் 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, துணைத் தலைவர் தேவசகாயம், ஊராட்சித் தலைவர் முருகன், தாசில்தார் சரவணன் பங்கேற்றனர்.