ADDED : ஜூலை 12, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.
நகராட்சி தலைவர் திருமலைசாமி தொடங்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் ஸ்வேதா முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சரவணன், கால்நடை டாக்டர் ராஜசேகரன், முதுநிலை மேலாளர் மதன்குமார் கலந்து கொண்டனர். செல்லப் பிராணிகளுக்கு ஆண்டுதோறும் கட்டாயம் ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும். நாய் கடித்து விட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதல் உதவி நடைமுறைகள், மருத்துவ சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
