ADDED : ஜூன் 19, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஜூன் 20-
லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு காங்., சார்பில் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெங்கமலை, இளைஞர் காங்., செயலாளர் பிரசன்னா, வேடசந்துார் வட்டார தலைவர்கள் சதீஸ், பகவான், பேரூராட்சி கவுன்சிலர் சுப்பிரமணி, அய்யலுார் நகர பொறுப்பாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
