ADDED : ஏப் 18, 2024 05:44 AM

ஒட்டன்சத்திரம்: சாமியார்புதுார் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆரத்தி, குழந்தை வரம் வேண்டி ஊஞ்சல் சேவை, பால் அபிஷேகம், கூட்டு வழிபாடு, மதிய ஆரத்தி, இரவு ஆரத்தி நடந்தது. நாள் முழுவதும் சிறப்பு அலங்காரத்துடன் சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வடமதுரை : ஸ்ரீராம நவமியை முன்னிட்டு வடமதுரை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருமஞ்சனம், அபிஷேகம் நடந்தது. ராமர் பஜனை மடத்திலிருந்து ராமர் பட ஊர்வலம் ரத வீதிகள் வழியே மங்கம்மாள் கேணி ஆஞ்சநேயர் கோயில் கொண்டுவரப்பட்டது. சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தது.
சின்னாளபட்டி : அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
உற்ஸவர் கோதண்டராமருக்கு, மலர் அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும் நடந்தது.ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

