/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தத்தில் ராயப்பர் தேர் பவனி திருவிழா
/
நத்தத்தில் ராயப்பர் தேர் பவனி திருவிழா
ADDED : ஆக 17, 2024 01:44 AM

நத்தம்: நத்தத்தில் உள்ள ராயப்பர் சர்ச் அன்னை மரியா விண்ணேற்பு திருவிழா ஆக. 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை தொடர்ந்து பாதிரியர்கள் தலைமையில் மூன்று நாட்கள் நவநாள் திருப்பலி நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்றிரவு மின்னொளி ரதத்தில் அன்னை மரியா ராயப்பருடன் வலம் வரும் தேர் பவனி நடந்தது. நத்தம் ராயப்பர் சர்ச்சில் புறப்பட்ட தேர்பவனி மாரியம்மன் கோவில் தெரு,பெரியகடை வீதி,அரிசி மார்க்கெட், மூன்றுலாந்தர் வழியாக மீண்டும் சர்ச் சென்றடைந்தது. பின்னர் நற்கருணை ஆசீர் வழங்க கொடியிறக்கம் நடந்தது. திண்டுக்கல் பிஷப் தாமஸ் பால்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நத்தம் பாதிரியார் டோமினிக் சேவியர் ,விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

