தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாடகையிலே இயங்கும் தபால் அலுவலகம்

வாடகையிலே இயங்கும் தபால் அலுவலகம்

வாடகையிலே இயங்கும் தபால் அலுவலகம்


ADDED : செப் 02, 2024 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : வடமதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் வரை தபால் நிலையம் வடமதுரை பேரூராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாப் அருகில் வாடகை இடத்தில் இயங்கியது. தற்போது அண்ணா நகர் விரிவாக்க பகுதியில் வாடகை கட்டடத்தில் உள்ளது. இப்பகுதிக்கு முறையான பாதை வசதி இல்லை. சேதமான ரோடு கொண்ட தனியார் இடம் சுற்றுப்பாதையாக கூட்டுறவு வங்கி வளாக பாதையை பயன்படுத்தி செல்ல வேண்டியது.

இப்பகுதி மக்கள் தபால் நிலைய சேவையை பயன்படுத்த அவசியமற்ற அலைச்சல்களையும், சிரமங்களையும் எதிர்கொள்ளும் நிலை உள்ளது. வடமதுரை பழைய போலீஸ் குடியிருப்பு அருகில் தபால் நிலையத்திற்கென இடம் வாங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டடம் அமைக்க நடவடிக்கை இல்லாமல் அவ்வப்போது சுத்தம் செய்யும் பணியுடன் கிடப்பில் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us