/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான பாதாள சாக்கடை குழாய்கள் சீரமைப்பு
/
சேதமான பாதாள சாக்கடை குழாய்கள் சீரமைப்பு
ADDED : ஏப் 28, 2024 05:24 AM

திண்டுக்கல் :  தினமலர் செய்தி எதிரொலியாக  திண்டுக்கல் பழநி ரோட்டில்  சேதமான பாதாள சாக்கடை இணைப்புகுழாய்களை சீரமைக்கும் பணி நடந்தது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு நந்தவனம்ரோடு பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் சேதமாகி கழிவுநீர் ரோட்டில் செல்கின்றன.
இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் கழிவுநீரில் தடுமாறி கீழே விழுகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகள் கழிவுநீருக்கு பயந்து வேறு வழியில் செல்கின்றனர்.  கழிவுநீர் ரோட்டில் செல்வதால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட   தொற்று  பரவலுக்கும் வாய்ப்புள்ளதாக, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக  மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில்  அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவிலிருந்து திண்டுக்கல் பழநி ரோட்டில் உள்ள  சேதமான பாதாள சாக்கடை இணைப்பு  குழாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக வந்த  வாகன ஓட்டிகளை போலீசார் வேறு வழியாக செல்ல  அறிவுறுத்தினர்.

