திண்டுக்கல் தீயணைப்பு அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள மீட்பு பொருட்கள்
திண்டுக்கல் தீயணைப்பு அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள மீட்பு பொருட்கள்
ADDED : மே 18, 2024 08:10 PM

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கனமழை எதிரொலியாக 10 தீயணைப்பு நிலையங்களில் மீட்பு பணிக்கு தேவைப்படும் பொருள்களோடு 200 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மே19,மே 20, என இரண்டு நாட்கள் அதிக அளவில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் மக்கள் ஏதேனும் விபத்துகளில் மழை பாதிப்புகளில் சிக்கிக் கொண்டால் அவர்களை உடனடியாக மேற்கும் வகையில் திண்டுக்கல், வத்தலகுண்டு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 10 தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள்,மீட்பு பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. இதன் ஏற்பாடுகளை நேற்று முதல் மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் செய்தனர். மழை பாதிப்புகளில் யாரேனும் சிக்கி அவதி அடைந்தால் உடனே 9445086325 இந்த அலைபேசி எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் அழைக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
