ADDED : ஜூலை 25, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஜூலை 26
ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் வேடசந்துார் வட்டார மாநாடு நடந்தது. ஒன்றிய தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமவேல் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மாயமலை, ஒன்றிய செயலாளர் காளிமுத்து பேசினர். ஒன்றிய பொருளாளர் முனியம்மாள் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
புதிய அரசிடம் அகவிலைப்படி கேட்பது, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களை இணைக்க கோருவது, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750 என அமல்படுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
