தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள்

கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள்

கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள்


ADDED : ஜூன் 26, 2024 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2024 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவிலில் காலை 7 :00மணிக்கு பால், பழம், பன்னீர் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் நடந்தது.

திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ரெயிலடி சித்தி விநாயகர், சவுராஷ்டிராபுரம் விநாயகர், வாணிவிலாஸ் மேடு கலைக்கோட்டு விநாயகர், ரவுண்ட்ரோடு கற்பக விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

நத்தம் : நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள விநாயகர் சன்னிதியில் ஆனி சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.

இதையொட்டி விநாயகபெருமானுக்கு அருகம்புல்,ரோஜா, மல்லிகை , முல்லை உள்ளிட்ட பல்வேறு மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அருகிலுள்ள முருகபெருமான் சன்னிதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோயில், அய்யாபட்டி மாணிக்க விநாயகர் கோயில்,நத்தம் மாரியம்மன் கோயில் ,லட்சுமி விநாயகர் கோயில் உள்ளிட்ட விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

செம்பட்டி : கோதண்டராம விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.

சின்னாளபட்டி : சதுர்முக முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us