நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் சன் அரிமா சங்கத்தின் சார்பில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைவர் டி. பி. ரவீந்திரன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்தார்.
டி.எஸ்.பி., மதுமதி, அரிமா சங்க திண்டுக்கல் மாவட்ட ஆளுநர் சசிகுமார், நிர்வாகிகள் பாண்டியராஜன், வாசன் சுதாகர், மங்கையர்கரசி கலந்து கொண்டனர். சன் அரிமா சங்கத் தலைவர் திரவியம் வரவேற்றார். நிர்வாகி பிச்சை நன்றி கூறினார்.
சங்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு நடந்தது.