/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்மாதிரி தொகுதியாக திண்டுக்கல் இருக்கும் எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முபாரக் வாக்குறுதி

ADDED : மார் 25, 2024 06:48 AM
திண்டுக்கல், : ''இந்தியாவில் 534 தொகுதிகளில் முன்மாதிரி தொகுதியாக திண்டுக்கல் தொகுதியை மாற்றுவேன் '' என அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகம்மது முபாரக் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: வரக்கூடிய தேர்தலில் நாளை நமதே நாற்பதும் நமதே என்ற வகையில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். இவ்வெற்றி 2026 சட்டசபைத் தேர்தலில் பொதுச்செயலாளர் பழனிசாமியை முதல்வராக அமர வைக்கும் விதத்தில் அமையும்.
தற்போதைய தி.மு.க., எம்.பி., எதையுமே செய்யவில்லை. ஆன்மிக நகரமான பழநியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாவட்டத்தில் உள்ள நிலவளம், நீர்வளம் முறையாக பயன்படுத்தவில்லை. அதனை முறைப்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன். இந்தியாவிலே 534 தொகுதிகளில் முன்மாதிரி தொகுதியாக திண்டுக்கல் தொகுதியை மாற்றுவேன் என்றார்.