ADDED : மார் 25, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி : நிலக்கோட்டை-செம்பட்டி ரோட்டில் காமுபிள்ளைசத்திரத்தில் பறக்கும் படை அலுவலர் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சரண்யா தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த ஆயில் வினியோக மினிவேனில் வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சந்திரன் 49, விசாரித்தனர். ஆவணங்களின்றி வைத்திருந்த 85 ஆயிரத்து 386ஐ பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

