தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கிடப்பில் போடப்பட்ட சாக்கடை அமைக்கும் பணி

கிடப்பில் போடப்பட்ட சாக்கடை அமைக்கும் பணி

கிடப்பில் போடப்பட்ட சாக்கடை அமைக்கும் பணி


ADDED : ஏப் 12, 2024 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2024 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேதமாகும் ரோடு

எரியோடு பாவாடைக்காரம்மன் கோயில் தெருவில் சமீபத்தில் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டோர காவிரி குடிநீர் பகிர்மான மேல்நிலைத் தொட்டியில் நிரம்பி வழியும் உபரி நீர் தெருவிற்குள் பாய்வதால் ரோடு சேதமடைகிறது. ஜோதிமணி, எரியோடு.

......------ஆபத்தான நிலையில் மரம்

நத்தம் ஆவிச்சிபட்டி கிராமத்தின் மையப் பகுதியில் காய்ந்த நிலையில் கூந்த பனைமரம் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பு அரிய வகை மரத்தினை உயிர்பிக்க அல்லது அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜசேகர், நத்தம்.

...........--------

கழிப்பறையால் சுகாதாரக்கேடு

வேடசந்துார் பஸ் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பறை சுகாதாரக்கேடாக உள்ளது .சுத்தமில்லாமல் இருப்பதால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .தினந்தோறும் மாணவர்கள் ,மக்கள் அதிகளவில் வந்து செல்வதால் சீர் செய்ய வேண்டும். திருப்பதி, திண்டுக்கல்.

...............--------சேதம் அடைந்த ரோடு

லெக்கையன்கோட்டை மடத்துக்குளம் பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டிற்கு செல்வதற்கான சர்வீஸ் ரோடு உள்ளது.இந்த ரோட்டில் பல இடங்கள் சேதமடைந்துள்ளதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. -வேல்முருகன் ,ஒட்டன்சத்திரம்.

................---------பிளாஸ்டிக் குப்பையால் தொற்று

திண்டுக்கல் பழநி ரோடு முருகபவனம் அருகே குப்பை கொட்டி பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பை குவிந்துள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது .குப்பையை அகற்ற வேண்டும். ஹரிஷ், திண்டுக்கல்.

.............---------சேதமடைந்த மின் பெட்டி

திண்டுக்கல் சிலுவத்துார் ரோடு மழைநீர் சேகரிப்பு மைய நடைப்பயிற்சி வளாகத்தில் திறந்து கிடக்கும் மின் மோட்டார் பெட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இங்கு பலரும் நடைபயிற்சி ஈடுபடுவதால் மின் பெட்டியை சரி செய்ய வேண்டும். ஆறுமுகம் குழந்தை,முள்ளிப்பாடி .

..............--------கிடப்பு பணியால் கழிவு நீர்

திண்டுக்கல் -பழநி ரோடு இந்திராநகரில் இருந்து முத்தழகுபட்டி செல்லும் ரோட்டில் சாக்கடை அமைக்க தோண்டி போட்டு பல நாட்கள் ஆகியும் ,அப்படியே விடப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. கழிவுநீர் தேங்கி உள்ளது. ஸ்டீவன்ராஜ், திண்டுக்கல்.

.................---------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us