ADDED : ஆக 04, 2026 07:25 PM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம், ஆக.5-
ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு மூலவர், ஜலகண்டேஸ்வரர், விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. கோயில் நுழைவாயிலில் உள்ள 18 அடி உயர கருப்பணசாமிக்கு 16 வகை திரவிய அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரம், பூஜைகள் நடந்தது.
சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், தருமத்துப்பட்டி ராமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
-
