தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சோலார் விழிப்புணர்வு முகாம்

சோலார் விழிப்புணர்வு முகாம்

சோலார் விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜூலை 17, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 10:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், ஜூலை 18

திண்டுக்கல் மின்வாரிய கோட்டத்தின் சார்பில் வீட்டு மின் இணைப்புகளுக்கான சோலார் விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி சமுதாயக் கூடத்தில் நடந்தது. கலெக்டர் துர்கா தலைமை வகித்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்ட செயல்பாடுகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். 5 பயனாளிகளுக்கு திட்ட அனுமதி சான்றிதழ் வழங்கினார். திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்தில் 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மின்நுகர்வோர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் பிரேம் ஆனந்த், வடக்கு செயற்பொறியாளர் முருகேஷ்பதி, உதவி செயற்பொறியாளர் (பொது) கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

4113 பேருக்கு வழங்க இலக்கு செயற்பொறியாளர் கூறுகையில், ‘ஒரு கிலோ வாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை மின் உற்பத்தி செய்யும். இதன் மூலம் நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம். இத்திட்டத்தின் கீழ் மின் இணைப்புகள் வழங்குவதற்கு திண்டுக்கல் மின்வாரிய வட்டத்திற்கு 4,113 எண்ணம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இதுநாள் வரை 1,200 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us