ADDED : ஜூலை 22, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஜூலை 23
திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டத்தின் கீழ் வீட்டு மின் இணைப்புகளுக்கான சோலார் விழிப்புணர்வு முகாம் வேடசந்துாரில் நடந்தது. கலெக்டர் துர்கா தலைமை வகித்தார். செயற்பொறியாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார்.
இத்திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் பேனல் அமைக்க ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரம், இரண்டு கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரம், மூன்று கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் அமைக்க ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படும். வங்கிக்கடனும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
உதவி செயற்பொறியாளர் கார்த்திக், பி.டி.ஓ.,க்கள் குமரன், கற்பகம், பேரூராட்சி செயல் அலுவலர் மரிய அந்தோணி யூஜின், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
