ADDED : ஜூலை 17, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஜூலை 18
பூத்தாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் மன்றம் தேர்தல் நடந்தது. பொறுப்பு தலைமை ஆசிரியர் கோபிநாதன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மோகன், காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர். செயலாளர்களாக அஜீஸ், ஓவியா தேர்ந்தெடுக்கப்பட்டனர். கண்காணிப்பு, கலை இலக்கியம், ஆங்கிலம், விளையாட்டு, சுகாதாரம், நுாலகம், கணினி குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி ஏற்றனர்.
