/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓவிய போட்டியில் சாதித்த மாணவர்கள்
/
ஓவிய போட்டியில் சாதித்த மாணவர்கள்
ADDED : ஏப் 18, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நெல்சன் நினைவு ஜவஹர்லால் நேரு குழந்தைகள் ஓவிய மன்றம் சார்பில் மாணவர்களுக்கான ஓவிய போட்டி புரபோசனல் கூரியர் நிறுவனர் கபிலன் தலைமையில் நடந்தது.
நிர்வாகி முனியப்பன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் பேசினார். நாட்டுபற்று, மதநல்லிணக்கம், இயற்கை காட்சி சார்ந்த ஓவியங்கள் போட்டி தேர்வாக நடத்தப் பட்டது.
முப்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற போட்டியில் எக்விடாஸ், கென்னடி, வாசவி, பிரான்சிஸ் சேவியர் சிறந்த ஓவியங்களுக்கான பரிசுகள் வென்றனர்.
ஓவிய ஆசிரியர் நல்லகாசிராஜன் நன்றி கூறினார்.

