UPDATED : ஆக 27, 2026 07:08 PM
ADDED : ஆக 27, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.-, சசிமோகன் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு, போலீஸ் துறை சார்ந்த பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்த டி.ஐ.ஜி., நிலுவையில் உள்ள வழக்குகள் விவரம், போலீசார் பற்றாக்குறை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன், இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, எஸ்.ஐ., தர்மர், போலீசார் உடனிருந்தனர்.
