ADDED : ஏப் 15, 2024 01:30 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ் புத்தாண்டான நேற்று திண்டுக்கல்லில் அதிகாலையிலே கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், 108 விநாயகர், தாடிகொம்பு சவுந்திராஜ பெருமாள், அபிராமி அம்மன் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் , தீபாரதனைகள் நடந்தது.
ஒய்.எம்.ஆர்., பட்டி சுப்பிரமணியசாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன், கந்தக்கோட்டம் முருகன் கோயில் என தமிழ் கடவுளான முருகனை வழிபட திரளான மக்கள் குவிந்திருந்தனர். பெரியோர்களிடம் சிறார்கள் ஆசி பெற்று கைநீட்டம் பெற்றுக் கொண்டனர். வீடுகளில் பூஜைகள் நடத்தி பஞ்சாங்கம் வாசித்து புத்தாண்டை வரவேற்றனர்.
