ADDED : மார் 01, 2025 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : முருநெல்லிக்கோட்டை ஊராட்சி பழைய கோட்டையில் இருந்து ஜி.நடுப்பட்டி ஊராட்சி வழியாக குருநாதநாயக்கனுார் கரட்டுப்பட்டி வரை 4 கி.மீ., துாரம் தார் ரோடு செல்கிறது.
இந்த ரோடு 15 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் போக்கு வரத்திற்கு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. பணி எதுவும் துவக்காமல் 15 நாட்களாக அப்படியே கிடப்பில் போட்டனர்.ஆத்திரமடைந்த ஜி.நடுப்பட்டி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் பேசிக்கொள்ளலாம் என கூறியதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.