ADDED : ஜூலை 10, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : அரசாணை 243யை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.
டி.என்.பி.டி.எப்., - நிர்வாகி பிரசாந்த் முன்னிலை வகித்தார். 50 க்கு மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றும் ஆர்ப்பாட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.