ADDED : ஜூலை 22, 2026 07:03 PM
ஒட்டன்சத்திரம், ஜூலை 23-
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஒட்டன்சத்திரம் வட்டார கல்வி அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டாரத் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நிர்மலா, துணைத்தலைவர்கள் மணி, பேபி விஜயபாரதி, துணைச்செயலாளர்கள் நடராசு, சீதா ஜெயலட்சுமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துராமன், சண்முகம் பேசினர். செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். சட்ட திருத்தத்தை வரும் லோக்சபா கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு கொண்டுவர வேண்டும். இதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
