/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேட்டைக்காரன் சுவாமிக்கு ஆடுகள் வெட்டி படையல்
/
வேட்டைக்காரன் சுவாமிக்கு ஆடுகள் வெட்டி படையல்
ADDED : பிப் 26, 2025 06:22 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உலுப்பகுடி வேட்டைக்காரன் சுவாமி கோயில் விழாவில் 50 க்கு மேற்பட்ட ஆடுகள் வெட்டி படையல் போடப்பட்டது.
இந்த கோயிலில் பல நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.இத்திருவிழா இரண்டு வாரம் நடைபெறும்.
முதல் திருவிழா பிப். 18 ல் நடந்தது. 2வது படையல் திருவிழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்க விழா தொடங்கியது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50-க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு இரவு முழுவதும் கிராமத்தார்களால் 10-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் உணவு சமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று காலை சுவாமிக்கு படையல் போட சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதன் பின் அங்கு கூடியிருந்த ஏராளமான ஆண்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

