/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எருது விடும் விழா; மக்கள் உற்சாகம்
/
எருது விடும் விழா; மக்கள் உற்சாகம்
ADDED : ஏப் 27, 2024 05:40 AM

ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் கோயில் கும்பாபிஷேக விழாவில் நடந்த எருது விடும் விழாவில் பார்வையாளராக பங்கேற்ற பொதுமக்கள் உற்சாகமூட்டினர். திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரம் எல்லப்பட்டியில் கெண்டு காட்டம்மாள் அம்மன், பொம்மையா சுவாமி , மாலை கோயில் ,மண்டு கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.
ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
இதில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் எருது விடும் போட்டி நடந்தது. 14 மந்தைகளை சேர்ந்த 150-க்கு மேற்பட்ட கால்நடைகளுடன் இளைஞர்கள் பங்கேற்றனர்.
எருதுகள் 2 கி.மீ., துாரத்திலிருந்து கோயில் வந்தடைந்து மண்டியிட்டு வணங்குவதை இலக்காக கொண்டு விழா நடந்தது.
பொதுமக்கள் காளைகளுடன், இளைஞர்களையும் உற்சாகப்படுத்தி விழாவை கொண்டாடினர்.

