ADDED : மார் 03, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடையகோட்டை : இடையகோட்டை முஸ்லிம் அரசு ஆரம்பப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், இனிப்புகள் வழங்கப்பட்டது.
கூட்டுறவு வங்கி தலைவர் செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் அழகியண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார், ஒட்டன்சத்திரம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, இளமதி, தினேஷ், முருகன், ஷாஜகான், பொன்னுச்சாமி பங்கேற்றனர்.