ADDED : ஆக 03, 2026 07:51 PM
தொப்பம்பட்டி, ஆக.4 – பழநி அருகே தொப்பம்பட்டியில் அங்காளம்மன் கோயில் திருவிழா, ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாட்டுத்தாவணி துவங்கியது.
பழநி தொப்பம்பட்டியில் அங்காளம்மன் திருவிழா, ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாட்டுத்தாவணி துவங்கி நடந்தது. இதில் காங்கேயம், ஈரோடு, சேலம், திருப்பூர், ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, உடுமலை, பொள்ளாச்சியில் பகுதியில் இருந்து மாடுகள் வரவழைக்கப்பட்டன. (நேற்று)ஆக.3ல் துவங்கி, ஆக.6ல் நிறைவு பெற உள்ள மாட்டுத்தாவணியில் காங்கேயம், லம்பாடி, சிந்து உள்ளிட்ட ஏராளமான மாடுகள் விற்பனைக்கு வந்தன. மாடுகள் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.ஒரு லட்சம் வரை விற்பனைக்கு வந்தன. மாடுகளுக்கு தேவையான தும்பு, கயிறு, மூக்கணாங்கயிறு, உள்ளிட்ட பொருட்கள் விற்பனையாகின. விவசாயிகள், வியாபாரிகள் பலர் இதில் பங்கேற்று, தங்களுக்கு பிடித்த மாடுகளை வாங்கிச் சென்றனர்.
