ADDED : ஜூலை 09, 2026 10:21 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஜூலை 10-
ஆத்துார் தாலுகா கொட்டாரப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் 46. இவரது மனைவி நந்தினி 33. இவர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் ரெட்டியார்சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஜெயபால் திண்டுக்கல் சிறையிலும், நந்தினி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
அதேபோல் மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா கிடாரிபட்டியை சேர்ந்த சையது காட்டு பாவா 36, பொது ஒழுங்கு பாதிக்குமாறு செயல்பட்டதாக ரெட்டியார்சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் துர்கா அனுமதி அளித்ததன்பேரில் மூவரும் குண்டாசில் சிறை வைக்கப்பட்டனர்.
