/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தக்காளி விலை வீழ்ச்சி; கிலோ ரூ.25
/
தக்காளி விலை வீழ்ச்சி; கிலோ ரூ.25
ADDED : ஜூலை 29, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.25க்கு விற்றது.
ஒட்டன்சத்திரம் சாலைப் புதுார், அம்பிளிக்கை, கொள்ளபட்டி சுற்றிய கிராமப் பகுதிகளில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி செடியில் இருந்த பூக்கள் உதிர்ந்து போனதால் மார்க்கெட்டில் வரத்து குறைந்தது. அப்போது ஒரு கிலோ தக்காளி ரூ.50 க்கு விற்பனையானது. இந்நிலையில் ஒரு வாரமாக தக்காளி வரத்து மார்க்கெட்டிற்கு அதிகரித்தது. இதன் காரணமாக தக்காளி விலை குறைய தொடங்கியது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 25 க்கு விற்றதது.