/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அலுவலர்களுக்கு பயிற்சி இரு கலெக்டர்கள் ஆய்வு
/
அலுவலர்களுக்கு பயிற்சி இரு கலெக்டர்கள் ஆய்வு
ADDED : மார் 25, 2024 07:02 AM
வேடசந்தூர், : கரூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்துார் சட்டசபை தொகுதியில் ஓட்டு சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு வேடசந்துாரில் நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலா தலைமை வகித்தார்.
ஓட்டுச்சாவடிகளில் எவ்வாறு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு தேர்தல் பணிகளை கையாளுவது என பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், அதற்கான கையேடு ஒன்றும் வழங்கப்பட்டது.
இதன் பயிற்சி வகுப்புகளை, திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, கரூர் கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தனர்.
தாசில்தார்கள் சரவணகுமார், ராஜேந்திரன், மணிமொழி, தாசில்தார் தமிழ்செல்வி, தாசில்தார் ஆரோக்கிய பிரிட்டோ பங்கேற்றனர்.

