ADDED : மே 10, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு, மே 11-
த.வெ.க., தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அக்கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, விராலிப்பட்டி, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி, வாடிப்பட்டி, அண்ணா நகர், நாகலாபுரம், நிலக்கோட்டை, மைக்கேல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
