/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் விபத்தில் இருவர் பலி
/
திண்டுக்கல்லில் விபத்தில் இருவர் பலி
ADDED : பிப் 15, 2025 04:43 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வெவ்வேறு பகுதிகளில் டூவீலரில் சென்ற கல்லுாரி மாணவர் உட்பட இருவர் லாரி, பஸ் மோதி இறந்தனர்.
வேடசந்துார் தேவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்26. டூவீலரில் வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டிலிருந்து பழநி பைபாஸ் ரோட்டிற்கு வந்தார். அப்போது எதிர்திசையில் வந்த மினிலாரி இவர் மீது மோதியதில் ரஞ்சித்குமார் இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல் கீழக்கோட்டையை சேர்ந்த தீபக்19, கலிக்கம்பட்டி ஈஸ்வர்21, அம்மாபட்டி வேணுகோபால்22 ,ஆகியோர் கரூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கின்றனர்.
இவர்கள் கல்லுாரி முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்றனர். சின்னாளப்பட்டி அருகே வந்தபோது தனியார் பஸ் மோதியதில் தீபக் இறந்தார். மற்ற இருவரும் காயமடைந்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

