ADDED : ஏப் 28, 2024 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் போடிக்காமன்வாடி அருகே டூவீலர் மீது கார் மோதியதில் அரசு விடுதி சமையலர் உட்பட 2 பேர் பலியாயினர்.
செம்பட்டி அருகே போடிக்காமன்வாடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 47. வத்தலக்குண்டு அடுத்த விருவீடு அரசு பள்ளி மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றினார். டூ வீலரில் செம்பட்டியில் இருந்து நேற்று ஊருக்கு சென்றார். இவரது உறவினர் வீரக்கல்லை சேர்ந்த சுப்பிரமணி 47, உடன் சென்றார். இருவரும் 'ெஹல்மெட்' அணியவில்லை.
திண்டுக்கல் - -தேனி ரோட்டில் போடிக்காமன்வாடி விலக்கு அருகே மதியம் 12:30 மணிக்கு வந்த போது பின்புறமாக வந்த கார் டூவீலரில் மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு பலியாயினர். செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

