ADDED : ஆக 01, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பாரதியார் தினம் ,குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
இதை முன்னிட்டு திண்டுக்கல்லில் நகர்புறம் - அ குறுவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் , தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டி அண்ணாமலையார் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது. ஜூலை 29ல் தொடங்கிய இக்குறுவட்ட போட்டிகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டிகள் நடந்து வருகிறது.
கூடைப்பந்து, வாலிபால், ேஹண்ட் பால் என 19 வகையான போட்டிகள் இம்மாத இறுதி வரை நடக்கிறது. நேற்று ேஹண்ட் பால் போட்டிகள் நடந்தது.