ADDED : ஜூன் 19, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஜூன் 20
வெல்லம்பட்டி ஊராட்சி அச்சனம்பட்டியை சேர்ந்தவர் மளிகைக்கடை உரிமையாளர் சக்திவேல் 53. இவர் வியாபாரத்திற்கு தேவையான காய்கறிகள் வாங்க வேனில் சென்றார். வேடசந்துார் எரியோடு ரோட்டில் ஸ்ரீராமபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோர மின்கம்பம் மீது மோதியது. மின்கம்பம் உடைந்து சாய்ந்தது. மின்கம்பிகள் அறுந்து ரோட்டின் குறுக்கே விழுந்தன. அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சுதாரித்து நின்றனர். போக்குவரத்து பாதித்தது.
இதையடுத்து வேனில் சிக்கிய சக்திவேலை அப்பகுதி மக்கள் மீட்டனர். மின்சப்ளை நிறுத்தியதும் போக்குவரத்து சீரானது. மின்லைனை சீரமைக்கும் பணியில் மின்ஊழியர்கள் ஈடுபட்டனர்.
