ADDED : மே 31, 2024 06:13 AM
அ நிறம் | அளவு
வடமதுரை : திருச்சி திருவானைக்கோயில் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சந்துரு 39.
நேற்று காலை தென்னம்பட்டி பகுதியில் இருந்து மணல் லோடுடன் மணப்பாறை நோக்கி சென்றார். நாடுகண்டனுார் பிரிவு பகுதியில் முன்பு சென்ற சரக்கு வேன் மீது மோதியது. வேன் நடுரோட்டில் கவிழ்ந்து கல்துாண்கள் சிதறின. வடமதுரையை சேர்ந்த வேன் டிரைவர் வடிவேல் 49, லோடுமேன் அமாவாசை 50, காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
